வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (13:20 IST)

17 மாவட்டங்களில் இன்று கனமழை - விவரம் உள்ளே!!

இன்று மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டால் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். 
 
தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. 
 
பருவமழையால் தமிழக நீர்நிலைகள் தற்போது முழுவதுமாக நிரம்பியுள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முதலாக நல்ல மழை பெய்துள்ளது.
 
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
 
இதனைத்தொடர்ந்து இன்று மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டால் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி போன்ற டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.