செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 மே 2020 (08:52 IST)

கோயம்பேடு சந்தை கிளஸ்டர் – கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 1589!

கோயம்பேடு காய்கறி சந்தையோடு தொடர்புடையவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1589 ஆக உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. சுமார் 3000 க்கும் மேல் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வரைக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கக் காரணம் கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட்டாக மாறியதுதான். அங்கு பணிபுரிந்த பல தொழிலாளர்களுக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களைப் பரிசோதிக்க மளமளவென எண்ணிக்கை உயர ஆரம்பித்தது.

இந்நிலையில் அந்த மார்க்கெட்டோடு மட்டும் தொடர்புடையவர்களில் 1589 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகமாகலாம் எனத் தெரிகிறது.