வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2019 (11:22 IST)

17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் !

17 வயது சிறுமியிடன் பழகி எல்லை மீறி கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருமே இன்னும் பள்ளிப்படிப்பை முடிக்காத நிலையில் அவர்களுக்கிடையிலானப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் பதின் பருவ வேகத்தில் எல்லை மீறியுள்ளனர். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த அந்த சிறுவன் அதன் பின்னர் அந்த சிறுமியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை யாரிடம் சொல்வது எனத் தெரியாத அந்த சிறுமி தவித்துள்ளார். கர்ப்பம் 5 மாதங்களைத் தாண்டியாதல் என்ன செய்வது எனத் தெரியாத சிறுமி போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுத்துள்ளார். இதையடுத்துப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர்கள் அந்த சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இருவருமே மைனர் என்பதால் போக்ஸோ சட்டத்தின் அந்த சிறுவனைக் கைது செய்தது செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பதின் பருவ ஈர்ப்பால் எல்லை மீறி 2 பேரும் வாழ்க்கையை இழந்து நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.