செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2024 (12:55 IST)

2 ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் பலி! டிரைவர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம்? – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Andhra Train accident
ஆந்திராவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் 14 பேர் பலியான நிலையில் டிரைவர்களின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.



கடந்த ஆண்டு ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் ராயகடா பயணிகள் விரைவு ரயில், பலாசா ரயிலின் பின்பகுதியில் மோதியதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கோரமான விபத்து நடந்ததன் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பேசியபோது “ஆந்திர மாநிலத்தில் இரு ரயில்கள் மோதிய விபத்து குறித்த விசாரணையில், ராயகடா பயணிகள் ரயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் செல்போனில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டு ரயிலை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவருமே அந்த விபத்தில் பலியானார்கள்.

இனி இதுபோன்ற கவனச்சிதறல் நடவடிக்கைகளில் ஓட்டுனர்கள் ஈடுபடாமல் இருக்க இவற்றை கண்காணிக்கும் அமைப்பை லோகோ எஞ்சினுக்குள் நிறுவி வருகிறோம். ரயில்களை இயக்குவதில் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K