1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மே 2022 (12:43 IST)

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. 

 
தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. 
 
இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இதனிடையே தற்போது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல்லில் மழை பெய்யும் எனவும் நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது.