திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (10:15 IST)

தினகரனுக்கு 5, அதிமுகவுக்கு 4 , திமுகவுக்கு 3: இதில் கூட தினகரனுக்கே அதிகம்

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொகுதியில் அரசியல் கட்சிகளும் தினகரன் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே களைகட்டியுள்ளது.

இந்த நிலையில் அனுமதியின்றி தொகுதிக்குள் நுழைந்ததாக நேற்று 12 வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவைகளில் தினகரன் அணியை சேர்ந்த 5 வாகனங்கள், அதிமுகவை சேர்ந்த 4 வாகனங்கள் மற்றும் திமுகவை சேர்ந்த 3 வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னும் அதிகளவிலான வாகனங்கள் அனுமதி பெறாமல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த வாகனங்களும் காவல்துறையினர் உதவியுடன் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.