1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2023 (13:21 IST)

அனுமதிக்கப்பட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு

fire crakers
சென்னையில் அனுமதிக்கப்பட்ட கால அளவை மீறி பட்டாசு வெடுத்தவர்கள் மீது சென்னையில் மட்டும் 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தீபாவளியையொட்டி மக்கள் அனைவரும் வீடுகளில் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில்,பெருங்குடி- 178, அரும்பாக்கம் -159,ராயபுரம் -115, வேளச்சேரி-117, என அனைத்து இடங்களில் காற்றின் தரக்குறிபீடடு 100 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட கால அளவை மீறி பட்டாசு வெடுத்தவர்கள் மீது சென்னையில் மட்டும் 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி படாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெரு நகர காவல்துறை கூறியுள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் காலையில் 6-7 மணி வரையிலும்  இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.