104 ஏரிகளில் முழு கொள்ளளவு..சென்னையில் 5 ஏரிகள் நிரம்பியது: நீர்வள ஆதாரத்துறை தகவல்..!
தமிழகத்தில் 104 ஏரிகளில் முழு கொள்ளளவை எட்டியது என்றும், சென்னை மாவட்டத்தில் 5 ஏரிகள் நிரம்பியதாகவும் நீர்வள ஆதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது என்றும், சென்னை மாவட்டத்தில் 5 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகளும் நிரம்பின என்றும் நீர்வள ஆதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்
மேலும் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது என்றும், நீர்வரத்து 301 கன அடி; நீர் வெளியேற்றம் 162 கன அடியாக உள்ளது என்றும் எனவே செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து ஏரிகள் உட்பட அனைத்து நீர் நிலைகள் நிரம்பி வருவதாகவும் இதனால் இந்த ஆண்டு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva