செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (09:49 IST)

நேற்று மட்டும் எத்தனை பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டது தெரியுமா?

இ பாஸ் எளிமையாக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று லட்ச கணக்கில் இ பாஸ் வழங்கப்பட்டது என தமிழக அரசு தகவல். 
 
தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
 
எனவே, இ-பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நேற்று முதல் (ஆகஸ்டு 17) இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 
 
அதாவது நேற்றைக்கு மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இ பாஸ் இல்லாமல் வந்தவர்களை போலீஸார் மடக்கி பிடித்து திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நேற்று நடைபெற்றது.