1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (13:27 IST)

நெல்லை விவசாயிடம் நூதன முறையில் ரூ1.17 லட்சம் மோசடி!

நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த விவசாயி துரை (37). இவரது செல்போன் எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவது போல பேசி ஒரு லிங்கை அனுப்பி அதனை கிளிக் செய்தால் தான் உங்கள் வங்கி கணக்கை புதுப்பிக்க இயலும் என்று கூறி , அவரது வங்கி கணக்கில் இருந்த 1.17 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இது குறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.