புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (23:00 IST)

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் கொள்ளையா? திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் அந்த கடையில் உள்ள சரக்குகள் அப்படியே இருக்கின்றன.



 




இந்த சரக்குகள் ஒருசில இடங்களில் கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்று மாலை கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் சாவியை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரனிடம் ஊழியர் சங்கத்தினர் கொடுக்க முன்வந்தபோது, சாவியை ஏற்க மறுத்துவிட்ட கலெக்டர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிற்து. இன்னும் 15 நாட்கள் காத்திருக்கும்படி, டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினரை அவர் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்கள் திரும்பிச் சென்றனர். ஆயினும் சரக்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கலெக்டர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.