திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (21:11 IST)

செந்தில் பாலாஜி ஒசியில் விளம்பரம் தேடுபவர் ..டாக்டர் பட்டம் பெற்றவரா ?எம்.அர்.விஜயபாஸ்கர் ஆவேசம் !

கரூர் அருகே 18 ஆண்டுகாலமாக தண்ணீர் வராத ஆத்துப்பாளையம் அணையிலிருந்து தண்ணீரினை,  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

15 தினங்களுக்கு ஒரு முறை என்று மூன்று மாதங்களுக்கு இந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்றும்., மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி ஒசியில் விளம்பரம் தேடுபவர் என்றும், நீர் மேலாண்மை திட்டத்தினை பற்றி குறைகூறுபவர் இவர் என்ன நீர்மேலாண்மை திட்டத்தில்  டாக்டர் பட்டம் பெற்றவரா ? என்றும் அமைச்சர் எம்.அர்.விஜயபாஸ்கர் ஆவேச பேசினார்.

கரூர் அடுத்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கார்வழி பகுதியில் உள்ள ஆத்துப்பாளையம் நீர் தேக்கத்தினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், தண்ணீர் திறக்கப்பட்ட வுடன் அதில் பூக்களை வீசி வரவேற்றார். இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து.,  அணைக்கட்டின் அருகிலேயே எம்.ஆர்.வி டிரஸ்ட் மூலம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மேடை நிகழ்ச்சியில் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்னர் அணை திறக்கப்படாமல் இருந்ததாகவும், ஒசியில் விளம்பரம் தேடும் மாஜி செந்தில் பாலாஜி, வந்து போஸ் கொடுத்து விட்டு சென்றுள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த 1995 ம் ஆண்டில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் கட்டப்பட்ட அணை தான் என்பதையும் சுட்டிக்காட்டியதோடு, இந்த நீர் தேக்கத்திலிருந்து நீர் திறக்க அரசாணை பெற வேண்டுமென்றும், கடந்த 1999 ம் ஆண்டு தடை ஆணை வாங்கிய நிலையில், திருப்பூர் சாயக்கழிவுகள் கலப்பதால் தான் இந்த தடை ஆணை வாங்கப்பட்டதாகவும், இந்த தடை ஆணையினை வாபஸ் பெற, நானும், இங்குள்ள விவசாயிகளும் முயற்சித்து பிறகு தான் இந்த அணை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இங்கு ஒரிரு தினங்களுக்கு முன்னர் வந்த மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர்மேலாண்மை திட்டத்தில் இந்த அரசை பற்றி குறைகூறியுள்ளார். இவர் என்னமோ நீர்மேலாண்மையில் டாக்டர் பட்டம் பெற்றவர் போல என்று மாஜி அமைச்சரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அவர், பின்னர், நீர்மேலாண்மையின் நாயகன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை சுட்டிக்காட்டியதோடு, தமிழக அளவில் கடந்த 1996 ஆம் ஆண்டிற்கு பின்பு குடிமராமத்து பணிகளை தீவிரப்படுத்தி, மேட்டூரில் திறந்து விடப்படும் காவிரி நீர் தற்போது கரூர் மாவட்டத்தில் கடைமடை பகுதி வரை செல்வதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்பதையும், அவர் ஒரு விவசாயி என்பதினால் தான், விவசாயிகளின் கஷ்டத்தினை உணர்ந்து அவர் குடிமராமத்து பணிகளில் தீவிரம் காட்டியுள்ளார் என்றார்.

மேலும், எந்தெந்த குளம், ஏரிகளை அரசு தூர்வாருகின்றதோ, அதை நான் தூர்வாரவேண்டுமென்று போட்டோவிற்கு போஸ் கொடுத்து தி.மு.க விற்கு நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்று செந்தில் பாலாஜி முயல்வதாகவும், அந்த ஏரிகளையும், குளங்களையும் அரசே தூர்வாருகின்றது என்றும் தெரிவித்தார். பின்னர் மேடைப்பேச்சினை முடித்து விட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது., இந்த கார்வழி பகுதியின் ஆத்துப்பாளையம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 19 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும், 18 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் நிகழ்வு என்பதனையும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம், சாயக்கழிவு நீர் கலக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அணையில் ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து கீழ் பவாணி உபரிநீர் 32 கி.மீட்டர் அளவிற்கு இந்த அணைக்கு வருவதாகவும், நொய்யல் ஆற்றிலிருந்து தேக்கினால் இந்த அணைக்கு நீரானது வரும் என்றும், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கினை ஒரே நாளில் தீர்த்து வைத்து தண்ணீர் திறக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினாரே என்பது குறித்து செய்தியாளர்களிடம் கேட்டதற்கு, 1999 ம் ஆண்டில் போடப்பட்ட வழக்கில் இவர் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 4 ½ ஆண்டுகாலம் அமைச்சராக இருந்த போது என்ன செய்தார் என்பதை கூறிய அமைச்சர்,. விவசாயிகளின் கோரிக்கையும், நியாயமானது, தடை ஆணை பெற்றதும் சரி என்றால், பவரில் இருக்கும் போது, ஆள் கண்ணுக்கு தெரியாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சுட்டிக்காட்டினார். ஆகவே, 15 தினங்களுக்கு ஒரு முறை மூன்று மாதங்களுக்கு இந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.