இளம் பெண்ணைக் கடத்தி கண், கை, வாயைக்கட்டி புதரில் வீசிய கடத்தல் கும்பல்! தாம்பரத்தில் பரபரப்பு

Muthukumar| Last Updated: வெள்ளி, 2 மே 2014 (16:26 IST)
சென்னை தாம்பரம் இரும்புலியூரில் நேற்று ரூ.10 லட்சம் கேட்டு இளம் பெண் ஒருவரை,
4 பேர் காரில் கடத்திச் சென்று சித்ரவதை செய்துள்ளனர்.

ரூ.10 லட்சம் கொடுக்கும் அளவுக்கு வசதி படைத்தவர் அவர் இல்லை என்பது தெரிந்தவுடன் நகைகளைப் பறித்துக் கொண்டு கண்ணையும், கைகளையும் கட்டிப் போட்டு விட்டு ரோட்டோரம் புதரில் வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இடும்புலியூரைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் பெயர் சாந்தி, வயது 35, இவரது கணவர் கார் டிரைவர். சாந்தி தி.நகரில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலைபார்த்துவந்தார்.
சாந்தி நேற்று மதியம் இரும்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் தி.நகர் செல்ல பேருந்துக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை உரசியபடி கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்த மர்ம நபர்கள் அவரை வாயைப்பொத்தி காருக்குள் அடைத்து கூடுவாஞ்சேரி நோக்கி வண்டியை ஓட்டினர்.


இதில் மேலும் படிக்கவும் :