வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மனோதத்துவம்
Written By Caston
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (17:00 IST)

பிரிஞ்சி இலையை எரித்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்

மன அழுத்தமும், பதற்றமும் நாளுக்கு நாள் மனிதர்களுக்கு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலையை எரித்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என ஆய்வு ஒன்று கூறுகிறது.


 
 
மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாக கொண்ட இந்த லாரல் மரத்தின் இலை தான் பிரிஞ்சி இலை என்று கூறப்படுகிறது. ஒரு பிரிஞ்சி இலையை எடுத்து எரித்தால் 5 நிமிடத்தில் மன அமைதியும், மன அழுத்தத்தில் இருந்து விடுதலையும் பெறலாம்.
 
மன அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிக்கும் காரணிகள் பிரிஞ்சி இலையில் இருக்கின்றன என பிரபல ரஷ்ய அறிவியல் அறிஞர் கென்னடி மால்கவ் என்பவர் கண்டறிந்தார். பொதுவாக இந்த பிரிஞ்சி இலை அதன் வாசனை காரணமாக உணவு தாயரிப்பின் போது பயன்படுத்தப்படும், மேலும் அதன் வாசனை காரணமாக பல தோல் சிகிச்சைகளுக்கும் மூலிகையாக பயன்படுகிறது. இயற்கையாகவே இந்த இலையில் மன அமைதியளிக்கும், மன அழுத்ததை குறைக்கும் தன்மை உள்ளன.
 
ஒரு காய்ந்த பிரிஞ்சி இலையை எடுத்து ஒரு அறையில் எரித்து வைத்து வீட்டு, 10 நிமிடம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் அந்த அறையில் நுழையும் போது அங்கு ஒரு அமைதியான சூழலை உணரலாம். எரிந்த இலையின் புகையில் நேர்மறையான ஆற்றல் ஓட்டம் உருவாக்கப்படுவதால் மன அமைதியை அது தருவதாக கூறப்படுகிறது.