1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. கவிதைகள்

மழை..!

- காகிதன்

மழை
கா‌கித‌ன் எ‌ன்ற க‌விஞ‌ர் எழு‌திய க‌விதை‌யி‌ல்...

webdunia photoWD
உலர்ந்த பூமியை
முத்தமிட்டு நனைக்கவந்த
ஒற்றைத்துளி நீயோ!

மேகக்காதலன்
பூமிக்காதலியைப் பார்த்து
வடித்த வா(ய்)நீரோ!

ஏழைவயல் நனைத்து
போகும் உயிர் காக்க வந்த
இறைகமண்டல நீரோ!

விளைநிலமல்லாது
களைநிலம்கூட வளர பகிர்ந்தளிக்கும்
சமநிலை இறை(ரை)யோ!

பள்ளி கல்லூரிகளுக்கு
இடைக்கால விடுமுறை அளிக்கவந்த
சட்ட வல்லுனரோ!

காலம் மறந்துவிட்ட
கடமைமுறைகள் பருவம்தவறாமல்
பெய்து நினைவூட்டவந்த
உத்தம புருஷரோ!

நீலக்கடலுறுஞ்சி
கருமை நிறம் மாறி
பச்சைநிலம் செழிக்க
வெள்ளை நீர்கொடுக்கும்
வண்ண மாயனோ
மழையோ
நீயோ..!

- காகிதன்
About Writer
Webdunia