திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (16:30 IST)

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

செய்யும் செயலில் வேகத்துடன் விவேகத்தையும் கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். செய்யும் காரியங்களால்  பெருமை ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு புத்தி சாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினர் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: அம்மன் கோயிலுக்கு சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபடவும்.  உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்.