செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30

Last Modified சனி, 31 ஆகஸ்ட் 2019 (16:28 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எண்ணம் - செயல் - புத்தி ஆகியவற்றில் நிதானமாகவும் சிரத்தையுடனும் இருக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள்  தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கி பணவரத்து கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும்.

பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்கி வரவும்.  மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :