Daily Horoscope
✕

செப்டம்பர் 2021 - 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

Written By Sugapriya Prakash
Updated: புதன், 1 செப்டம்பர் 2021 (15:09 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த ஒரு விஷயத்தையும் சாதகமா பாதகமா என்று முன்கூட்டியே யூகித்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறமையுடைய நான்காம் எண் அன்பர்களே, இந்த மாதம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு தேவையற்ற செலவு ஏற்படலாம். கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும்.
 
பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்