Daily Horoscope
✕

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:55 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் தொட்ட காரியம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள்.

அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும் என்றாலும் தந்தைக்கு வேலைச்சுமை, அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.
 
கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப் பெறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 6, 15, 26, 13, 14
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
About Author
லெனின் அகத்தியநாடன்

எல்லாம் காட்டு

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணமாக அமையட்டும் - சத்குருவின் தீபாவளி வாழ்த்து!..

தீபாவளிக்கு முன்பு எந்த பொருளையெல்லாம் தூக்கி வீசணும்? - வாங்க பார்ப்போம்

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments