Daily Horoscope
✕

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:03 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு, சலிப்பு, படபடப்பு நீங்கும். முன்கோபம் விலகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும்.
 
மனக்கசப்பால் விலகி நின்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.
 
மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். உங்கள் நட்பு வட்டம் விரியும். பழைய கடனை பைசல் செய்ய என்ன வழி இருக்கிறது என்று யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! திருமணத் தடை நீங்கும். ஆரோக்யம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். உயரதிகாரிகளுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். சிக்கல், பிரச்னைகள் தீருவதுடன் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 18, 30
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி
About Author
லெனின் அகத்தியநாடன்

எல்லாம் காட்டு

இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோபாஷ்டமி பண்டிகை.. கோபூஜை செய்ய சரியான நேரம் எது?

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணமாக அமையட்டும் - சத்குருவின் தீபாவளி வாழ்த்து!..

தீபாவளிக்கு முன்பு எந்த பொருளையெல்லாம் தூக்கி வீசணும்? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments