செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:23 IST)

மே 2020 - எண்ணியல் பலன்கள்: 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
அனைவரிடமும்  பாசமாக இருக்கும் இரண்டாம் எண் அன்பர்களே, தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.

புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடி புகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன்  இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம்.
 
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று 3 முறை வலம் வரவும்.