மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26

Last Updated: வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:22 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இடத்திற்கேற்றாற்போல் தனது விருப்பங்களை அமைத்துக்கொள்ளும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம்  சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில்  தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும்  குறையும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

பெண்களுக்கு தடைபட்ட  காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  மாணவர்களுக்கு  கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கும்.  கலைத்துறையினருக்கு கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். அரசியல் துறையினருக்கு விரும்பிய  நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.

பரிகாரம்:  தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.


இதில் மேலும் படிக்கவும் :