மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31

Last Updated: வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:19 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

யாருடைய மனதும் புண்படும்படி நடந்து கொள்ளத் தெரியாத நான்காம் எண் அன்பர்களே இந்த  மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும்.  புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த  கருத்து மோதல்கள் மறையும். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம்  அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் துறையினருக்கு சுணக்க நிலை மாறும்.

பரிகாரம்: அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.


இதில் மேலும் படிக்கவும் :