மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

Last Updated: வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:18 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பெரியோர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரிய தடை  ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள்  நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம்  கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.  குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன்  கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு பயணம் ஏற்படும். அரசியல்  துறையினர் மேலிடத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

பரிகாரம்:  திங்கட்கிழமை அன்று நவக்கிரகத்தில் சந்திரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :