திங்கள், 29 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (17:21 IST)

ஜூலை 2020 - எண்ணியல் பலன்கள்: 9, 18, 27

ஜூலை 2020 - எண்ணியல் பலன்கள்: 9, 18, 27
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் செவ்வாய்
 
பொது காரியங்களில் விருப்பம் உள்ள ஒன்பதாம் எண் வாசகர்களே நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்று செயல்படுவீர்கள். இந்த மாதம் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு  மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும்.

தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமாகலாம். போட்டிகளை சமாளிக்க  வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். 

பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைகண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும். பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் முருகனுக்கு அரளிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்க குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல்  ஆரோக்கியம் உண்டாகும்..