ஜூலை 2020 - எண்ணியல் பலன்கள்: 7, 16, 25

Sugapriya Prakash| Last Modified புதன், 1 ஜூலை 2020 (17:15 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:  நாயகர் கேது
 
மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய ஏழாம் எண் வாசகர்களே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம்  லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்தி சாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள்.

சிலருக்கு புதிய  ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும்  கிடைக்கும்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப  விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை  படிப்பதில் கவனம்தேவை.
 
பரிகாரம்: ஸ்ரீவிநாயகரை செவ்வாய் கிழமையில் நெய் தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :