ஜூலை 2020 - எண்ணியல் பலன்கள்: 8, 17, 26

Sugapriya Prakash| Last Modified புதன், 1 ஜூலை 2020 (17:18 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் சனி
 
சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் எட்டாம் எண் வாசகர்களே இந்த மாதம் எல்லா வகையிலும் நல்லதே  நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும்.

எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும்  இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பிள்ளைகளுக்கு தேவையான  பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். பெண்களுக்கு தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். 
 
பரிகாரம்: சனி கிழமைகளில் ஐய்யப்பனுக்கு துளசி சாற்றி வர கடன் தொல்லை குறையும்.  காரிய தடை நீங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :