ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (16:33 IST)

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஏழைக்களுக்கு உதவி செய்து அதில் தான் மகிழும் எண்ணம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும். 

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.