ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (15:23 IST)

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் - நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை  அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.