ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23

Last Updated: புதன், 31 ஜூலை 2019 (15:21 IST)
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
நுணுக்கமான அறிவைக் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.  வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் நீங்க திட்டமிடுவதில் கவனம் தேவை உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் அகலும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு உடல்நலத்தில் அக்கறை தேவை. கலைத்துறையினர் மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.
 
பரிகாரம்:  சிவபெருமானை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :