செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Numerology
Last Modified சனி, 1 செப்டம்பர் 2018 (14:19 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:


அனைவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம்நீண்ட காலமாக இருந்து வந்த கவலைகள் அகலும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.
 
பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
 
கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும்.
 
அரசியல்துறையினர் எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள்.
 
மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.
 
பரிகாரம்: சிவன் கோவிலை செவ்வாய்கிழமை அன்று தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.இதில் மேலும் படிக்கவும் :