செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

Numerology
Last Modified சனி, 1 செப்டம்பர் 2018 (14:17 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:


எந்த காரியத்தையும் மனநிறைவுடன் செய்யும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின்  நட்பை ஏற்படுத்தும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம்.
 
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது.
 
கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். 
 
அரசியல்துறையினருக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள்.
 
மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. 
 
பரிகாரம்: மரிக்கொழுந்தை அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.இதில் மேலும் படிக்கவும் :