செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (20:01 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வேகமும் விவேகமும் ஒருங்கே அமையப்பெற்றம் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 5
பரிகாரம்:  லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.