திங்கள், 8 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:41 IST)

ஏப்ரல் 2021 - 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

ஏப்ரல் 2021 - 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு... 

 
கொடுத்த வாக்கை உயிருக்கு மேல் மதிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். சுபச்செலவுகள் அதிகமாகும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதோ நன்மை தரும்.

பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

பெண்கள் மற்றவர்களுக்காக  எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
 
பரிகாரம்: தினமும் சந்திர ஹோரையில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.