வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:41 IST)

ஏப்ரல் 2021 - 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
ஒழுக்கத்தையும் நேர்மையையும் தாரகமாகக் கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும்.

உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மனமகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கடன் பிரச்சனை தீரும். அரசியல்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
 
பரிகாரம்:  நவக்கிரகங்களில் குருவை வியாழக்கிழமை அன்று வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்