1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:40 IST)

ஏப்ரல் 2021 - 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு... 

 
நடையில் மிடுக்கும் எடுக்கும் முடிவில் வேகமும் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. வியாபாரம் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

குடும்பத்தில் நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். பெண்கள் பயணம் செய்யும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.
 
பரிகாரம்: தினமும் சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும்.