செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சுவையான செட்டிநாடு வௌவால் மீன் குழம்பு செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
மீன் - அரை கிலோ
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 10 பல்
புளிக் கரைசல் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - அரை மூடி
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சோம்பு - 1 ஸ்பூன்

செய்முறை:
 
முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து வைத்துள்ள மீனில் சிறிதளவு உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பின்னர் ஒரு கடையில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 
பின்னர் அதில் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி பூண்டு சேர்க்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன்  புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.
 
கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். மசாலா புளிகரைசலுடன் சேர்ந்து கொதித்து கெட்டியானதும் மீனை சேர்க்கவும். மீன் வெந்தவுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாடு வௌவால் மீன் குழம்பு தயார்.