வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

ஆனியன் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு


 
 
செய்முறை:
 
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சிபூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.
 
பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும்.
 
சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியதும் நறுக்கி வைத்திருக்கும் மீதி வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி விடவும்.
 
குறிப்பு: மேலும் இதனுடன் குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.