வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த மீன் கட்லெட்

சுவை மிகுந்த மீன் கட்லெட்

தேவையான பொருட்கள்:
 
மீன் - 1/2 கிலோ (முள் இல்லாத வஞ்சிரம் மீன்)
உருளைக்கிழங்கு - 2
சி-வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா - 1 தேவையான அளவு
ரஸ்க் - 4 (தேவைக்கு ஏற்ப)
முட்டை - 2 (தேவைக்கு ஏற்ப)
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
* முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். இதன் பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
 
* இதனை மீன் கலவையில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
 
* முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அகன்ற பாத்திரத்தை உடைத்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
 
* வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் தோய்த்த பின், ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சுவையான மீன் கட்லெட் தயார்.