திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

ருசியான நாட்டுக்கோழி குழம்பு செய்ய வேண்டுமா...!

தேவையான பொருள்கள்:
 
நாட்டுக்கோழி - 1/2 கிலோ 
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தயிர்  - 2 மேஜைக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
மல்லித்தழை - சிறிது 
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
 
வறுத்து அரைக்க வேண்டியவை:
 
மிளகாய் வத்தல் - 5
கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
மிளகு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் - 100 கிராம் 
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
பட்டை - 1 இன்ச் அளவு 
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது

 
செய்முறை: 
 
கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து, ஆற விட்டு மிக்ஸ்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும். தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
                                 
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், அரைத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு  நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும்படி நன்கு கிளறி விட்டு  அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
                                                                                    
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கறி வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.