மூளைக் குழம்பு

Mahalakshmi| Last Modified திங்கள், 23 பிப்ரவரி 2015 (09:59 IST)
தேவையான பொருட்கள்:

ஆட்டு மூளை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தேங்காய் - 2 பத்தை
உடைத்த கடலை - ஒரு கைப்பிடி
சீரகம், பட்டை, சோம்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
தயிர் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 மூடி
எண்ணெய் - தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை
செய்யும் முறை:

முதலில் மூளையை தண்ணீர் விட்டு கழுவி அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் மூளை வெந்ததும் அதன் மேல் ஜவ்வை எடுத்துவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, பட்டை, சோம்பு, போன்றவற்றை வறுத்து, அதனுடன் நறுக்கிய தேங்காய், மிளகாய் தூள், உடைத்த கடலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூளை துண்டுகள், அரைத்த மசாலா, நறுக்கிய வெங்காயத்தில் பாதி, பூண்டு, உப்பு, தயிர், தேங்காய் பால் கல‌ந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் குழம்பை அதில் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :