வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

வட இந்தியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தசரா திருவிழா !!

இந்தியாவின் பல பகுதிகளிலும் தசரா அல்லது விஜயதசமித் திருவிழாவாக தீயதை அழித்து நல்லதை வரவேற்பதைக் குறிக்கும் விழாபாடாக இந்து மக்களால் பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.

தசரா என்ற சொல்லும் இதே பொருளைக் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் நவராத்திரி விழாவாகவும், வங்காளம் மற்றும் வட இந்தியாவில் துர்கா உத்சவமாகவும் கொண்டாடப்படுகின்றது.
 
தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமியானது அனுசரிக்கப்படுகின்றது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது. தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் இப்புனிதத் திருநாளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.
 
வங்காளத்தில் துர்கையானவள் அரக்கன் மகிசாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனைக் கொன்ற பத்தாம் நாள் வெற்றியை மக்கள் விஜயதசமித் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். 
 
உலக தர்மத்தைக் காக்க அரக்கனுடன் போரிட்டு வெற்றியை உலகிற்கு அர்ப்பணித்த துர்க்கையின் திருவுருவமானது ஊரின் பல பகுதிகளிலும் மண்டல்கள் அமைத்து காலை, மாலை பூஜை மற்றும் பஜன், தாண்டியா என்று ஊரே விழாக்கோலம் பூண்டு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.