வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:55 IST)

3 ஆண்டுகளை நிறைவு செய்த செக்க சிவந்த வானம்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

மணிரத்னத்தின் சமீபத்தைய படமான செக்கச் சிவந்த வானம் ரிலீஸாகி இன்றோடு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த்சுவாமி, சிம்பு, அருண் விஜய் என மல்டி ஸ்டார்களை கொண்டு மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் இதே நாளில்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக பல குறைகளை கொண்டிருந்தாலும் பல நட்சத்திரக் கூட்டணியால் வசூலில்  வேட்டையாடியது.

பல ஆண்டுகளாக ஹிட் கொடுக்காத மணிரத்னத்துக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் 3years of செக்க சிவந்த வானம் என்ற ஹேஷ்டேக்கை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.