1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 ஜனவரி 2018 (17:46 IST)

குழந்தையின் உடலில் இருந்து பெனியின்ட் தின்னரை நீக்க கொழுப்பை பயன்படுத்திய மருத்துவர்கள்

டெல்லியில் 14 மாத குழந்தையின் உடலில் இருந்து பெயின்ட் தின்னரை நீக்க மருத்துவர்கள் கொழுப்பை பயன்படுத்தி உள்ளனர்.

 
ஆக்ராவைச் சேர்ந்த 14 மாத குழந்தை பெயின்ட் தின்னரை குடித்ததால் குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் முயற்சி செய்தும் தின்னரை வெளியேற்ற முடியவில்லை. இதனால் குழந்தையை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 
 
கங்காராம் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தையின் உடம்பில் ஊசி மூலம் கொழுப்பை செலுத்தி தின்னரை வெளியே எடுத்துள்ளனர். இதுகுறித்து கங்காராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் திரன் குப்தா கூறியதாவது:-
 
கொழுப்பால் கரைய கூடிய ஒன்றுதான் பெயின்ட் தின்னர். உடம்பில் கொழுப்பை செலுத்தும்போது குடலில் அடைத்து இருக்கும் தின்னரை கரைத்து விடும். சிறுநீர் மற்றும் ஜீரணத்தின் மூலம் சரி செய்யப்பட்டு விடும். இந்த முறையில்தான் குழந்தையை காப்பாற்றினோம். இது ஒரு புதிய முறை வைத்தியம் என்று கூறினார்.