செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அதிக மருத்துவ பயன்களை கொண்ட பப்பாளி...!!

பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, பி, எ, கால்சியம் இதுபோன்ற பலவிதமான சத்துக்கள் பப்பாளி பழத்தில் உள்ளதால் இதய நோய் போன்ற பலவிதமான நோய்களையும் குணமாக்கும். பப்பாளி பழம் ஜீரண சக்தியை அதிகரித்து அஜீரணத்தை குணமாக்கும்  தன்மையை கொண்டது.
பப்பாளி பழம் தாய்ப்பால் சுரக்கும் ஆற்றல் கொண்டது . மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்  சரியாகிவிடும். கர்ப்பகாலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது கருக்கலைப்பை எற்படுத்தும்  தன்மையையும் கொண்டுள்ளது. செரிமான மாத்திரைகள் இந்த பப்பாளி பழத்தில் இருந்து தான் தயாரிக்க பயன்படுகிறது .
பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது .பப்பாளி விதையில் உள்ள ஆன்டி ஆக்சிஜன் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து  உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்தை குறிக்கும். 
 
பப்பாளி பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பப்பாளி பழத்தின் கனிந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை  தடை செய்யலாம். பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் கண்களில் எற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. இந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் சருமத்தில் எற்படும் சுருக்கங்களை தவிர்க்கலாம்.