1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கேரட்டினை சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவது நல்லது ஏன்...?

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள்.

கேரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும்.
 
சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும். இதில் வைட்டமின் 'ஏ' செறிந்துள்ள காரணத்தால், ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது
 
கேரட்டை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும். அது மட்டுமன்றி இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது.
 
வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோயை குணமாகும் கேரட். வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதிலிருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தருகிறது.
 
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை தினமும் காரட் சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்க இயலும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தியும் செய்கின்றது.
 
குடல் புண்கள் உண்டாகாமல் தடுக்கின்றது. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாற்றுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட பித்த கோளாறுகள் சரியாகும்.