1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 8 அக்டோபர் 2022 (16:14 IST)

உடலுக்கு தேவையான தாமிரச்சத்து எளிதாக பெற என்ன செய்யவேண்டும்...?

செம்பு பாத்திரத்தில் நீரை சேர்த்து குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் உடலுக்கு தேவையான தாமிரச்சத்து எளிதாக கிடைக்க கூடும். செம்பு பாத்திர நீரை குடிப்பதன் மூலம் அது வயிற்றுக்குள் கேடு தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழிக்க செய்கிறது.


தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைத்த தண்ணீரை அருந்துவதால், செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம். இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது.

தாமிரம் மிகவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. முடக்குவாதம், மூட்டுகள் வீக்கம் போன்றவற்றால் உண்டகும் வலிகளை போக்க தாமிரம் உதவுகிறது.

இது எலும்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் குணங்களை கொண்டுள்ளது. செம்பு பாத்திர நீர் குடித்து வரும் போது அது கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்துக்கு சரியான தீர்வாக அமைகிறது.

செம்பு பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் நீர் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. செம்பு காயங்களை விரைவாக குணப்படுத்த கூடிய பண்புகளை கொண்டுள்ளது. மேலும் செம்பு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இறந்த செல்கள் நீங்கி புதிய செல்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு உடலில் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க செய்கிறது. இதய நோய் பொதுவான ஆபத்தாக இருந்தாலும் இது உருவாகும் அபாயத்தை குறைக்க தாமிரம் உதவுகிறது.

Edited by Sasikala