புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத செயல்கள் என்ன......?

பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரம் வந்துவிட்டது என்பதற்காக வலுக்கட்டாயமாக எதையும் சாப்பிடக் கூடாது. உணவை நொறுங்கக் கடித்து, மென்று சாப்பிட வேண்டும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவும் சாப்பிட்டு முடித்து அரை மணி நேரத்துக்குப் பின்னரும் தண்ணீர் குடிக்கலாம்.  சாப்பிடும்போது குடிக்கக் கூடாது.
 
புகைப்பிடிக்க கூடாது. இது செரிமானத்தன்மையைக் குறைத்து, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
 
பழச்சாற்றை குடிக்கக் கூடாது. இது செரிமானத்துக்கு உதவும் டைஜெஸ்டிவ் ஜூஸை உருவாகவிடாமல் தடுக்கும். செரிமானக் கோளாறை  உண்டாக்கும்.
 
உணவு சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. செரிமானத்துக்குத் தேவையான நேரத்தை தூங்குவது குறைத்துவிடும். இது, உடல் பருமனுக்கு  வழிவகுக்கும்.
 
உடற்பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தால் வயிற்றுப்பிடிப்பு, வயிற்றுவலி ஏற்படும் வாய்ப்பு உண்டு.
 
சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. இது கை கால்களில் சீரற்ற ரத்த ஓட்டத்தை உண்டாக்கும். செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளில்  இடையூறை உண்டாக்கும்.
 
டீ, காபி குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ஆக்ஸலேட் மற்றும் ஃபைலேட் உடலில் இரும்புச்சத்தை உறியும் செயலை சரியாக  நடக்கவிடாமல் தடுக்கும்.