திங்கள், 15 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வாழைப்பழத் தோலில் இத்தனை பயன்கள் உண்டா...?

வாழைப்பழத் தோலில் இத்தனை பயன்கள் உண்டா...?
வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை தூக்கி எறிய மாட்டீர்கள். முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவி, அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, கருப்பாக காணப்படும். இவ்வாறு பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம்  அளித்து அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.
 
வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின் வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு  முழுவதும் வைத்துருங்கள், நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
 
சிறு பூச்சிகள் கடித்தால், வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில்  தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
வாழைப்பழத் தோலில் இத்தனை பயன்கள் உண்டா...?
முகப்பருவை எளிதில் போக்க பாதிக்கப் பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை தடவுவதால், அதில் உள்ள ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று செயல்புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து தழும்புகளும் மறையும்.
 
தினமும் பல் துலக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப்பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்கள்  பற்கள் மின்னும்.
 
காயங்களுக்கு வாழைப்பழத் தோலை பூசுவதால் உடல் காயம் ஆறுவதோடு உடல் ஆரோக்கியத்தும் நல்லது.