1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவகுணம் நிறைந்த பனங்கற்கண்டு எந்த பிரச்சனைகளுக்கு தீர்வாகும்...?

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும்  பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை,  இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள்  கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
 
பனங்கற்கண்டை சளி மற்றும் இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.
 
சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
 
சோர்வாக இருந்தால் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.
 
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு  பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.
 
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படும்போது 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.